விஜய் தலைமையிலான தவெக கட்சியினர், ECR பகுதியில் ரிசார்ட்டுகள் மற்றும் தங்கும் இடங்களை தீவிரமாக தேடி வருவதாக தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் சூழல் சூடுபிடித்துள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கைக்கு முன் அல்லது பிந்தைய அரசியல் நகர்வுகளை முன்னிட்டு இந்த ஏற்பாடுகள் நடைபெறலாம் என கூறப்படுகிறது. பொதுவாக முக்கிய தேர்தல் நேரங்களில் கட்சி வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளை ஒரே இடத்தில் தங்க வைக்கும் அரசியல் யுக்தி பலமுறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இதனால், ECR முழுவதும் ரிசார்ட்டுகள், ஹோட்டல்கள் மற்றும் தனியார் தங்கும் வசதிகள் குறித்த விசாரணைகள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைக்கான “கமாண்ட் சென்டர்” உருவாக்க முயற்சியா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
விஜய் நேரடியாக இந்த பணிகளை கண்காணிக்கிறாரா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. இருப்பினும், அவரது அரசியல் நகர்வுகள் தற்போது அதிக கவனத்தை ஈர்த்து வருகின்றன.
ஒரு ரூம் தேடல் போல தோன்றினாலும்… அதன் பின்னால் பெரிய அரசியல் திரைக்கதை எழுதப்படுகிறதா என்ற ஆர்வம் தமிழக அரசியலில் பரவி வருகிறது


