திருச்செந்தூரில் நடைபெற்ற வழிபாட்டைத் தொடர்ந்து, தற்போது சீரடியில் தரிசனம் செய்ததாக தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
சமீப காலமாக விஜயின் ஒவ்வொரு பயணமும் பொதுமக்கள் மத்தியில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த சீரடி பயணம் மேலும் பேசுபொருளாக மாறியுள்ளது. தனிப்பட்ட ஆன்மிக நம்பிக்கையாலா, முக்கிய வேண்டுதலுக்காகவா, அல்லது அரசியல் பரபரப்புக்கு மத்தியில் அமைதியான பயணமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இந்தியாவின் முக்கிய பக்தி மையங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அங்கு விஜய் வழிபாடு செய்த தகவல் வெளியானதும், சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்துகள் மற்றும் புகைப்படங்கள் வைரலாக பரவி வருகின்றன.
சினிமா உலகின் முன்னணி நட்சத்திரமாக இருந்த விஜய், தற்போது அரசியல் மேடையிலும் கவனிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது ஆன்மிகப் பயணங்கள் கூட தனி செய்தியாக மாறி வருகின்றன.
திருச்செந்தூரில் தொடங்கிய பக்தி பாதை… சீரடியில் தொடர்கிறது. இந்த பயணத்தின் அடுத்த நிறுத்தம் என்ன என்பதே இப்போது அனைவரின் கேள்வியாக உள்ளது.


