சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (AICC) தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 28 தொகுதிகளில், தற்போது 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலூர் தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளார். இதில் தற்போதைய எம்.எல்.ஏ-க்கள், மூத்த தலைவர்கள் மற்றும் புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
முக்கிய வேட்பாளர்கள் மற்றும் தொகுதிகள்:
ஸ்ரீபெரும்புதூர் - (தனி)கே. செல்வப்பெருந்தகை (மாநிலத் தலைவர்)
வேளச்சேரி - ஜே.எம்.எச். ஆசன் மௌலானா
பொன்னேரி (தனி)- துரை சந்திரசேகர்
பென்னாகரம் - ஜிகேஎம் தமிழ்குமரன் (பாமக-விலிருந்து இணைந்தவர்)
ஈரோடு கிழக்கு - கோபிநாத் பழனியப்பன்
உதகமண்டலம் - பி. ராமச்சந்திரன்
காரைக்குடி - எஸ். மாங்குடி
நாங்குநேரி - ரூபி மனோகரன்
விளவங்கோடு - டி.டி. பிரவீன்
கிள்ளியூர் - வழக்கறிஞர் எஸ். ராஜேஷ் குமார்
பட்டியலின் சிறப்பம்சங்கள்:தலைவர் போட்டி: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. செல்வப்பெருந்தகை மீண்டும் தனது சொந்தத் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரில் களம் காண்கிறார்.புதிய வரவு: சமீபத்தில் பாமக-விலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்த ஜிகேஎம் தமிழ்குமரன், பென்னாகரம் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
மண்டல வாரியாக:
கொங்கு மண்டலத்தில்
கிருஷ்ணகிரி (டாக்டர் ஏ. செல்லக்குமார்),
கவுண்டம்பாளையம் (கே.பி. சூர்ய பிரகாஷ்)
மற்றும் தெற்கு மண்டலத்தில் ஸ்ரீவைகுண்டம் (எஸ். ஊர்வசி அமிர்தராஜ்)
உள்ளிட்ட தொகுதிகளில் வலுவான வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.தேர்தல் தேதி
குறிப்பு:தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்ரல் 6-ம் தேதி கடைசி நாள் என்பதால், அடுத்த ஓரிரு நாட்களில் மீதமுள்ள ஒரு தொகுதிக்கான வேட்பாளரும் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.முக்கிய குறிப்பு: வாக்கு எண்ணிக்கை மே 4, 2026 அன்று நடைபெறவுள்ளது.


