அரசியல்

169 தொகுதிகளில் இரட்டை இலை: அதிமுக கூட்டணியின் அதிரடி தொகுதிப் பங்கீடு விவரம்!

top-news

சென்னை: வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொகுதிப் பங்கீடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி, அதிமுக 169 தொகுதிகளில் நேரடியாகக் களம் இறங்குகிறது. கூட்டணி கட்சிகளுக்கு மீதமுள்ள 65 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள்:

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் இறுதி செய்யப்பட்ட தொகுதிப் பட்டியல்:

பாரதிய ஜனதா கட்சி (BJP): 27 தொகுதிகள் (கடந்த முறையை விட 7 இடங்கள் அதிகம்).

பாட்டாளி மக்கள் கட்சி (PMK): 18 தொகுதிகள்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (AMMK): 11 தொகுதிகள்.

தமிழ் மாநில காங்கிரஸ் (TMC): 5 தொகுதிகள்.

இந்திய ஜனநாயாக கட்சி (IJK): 2 தொகுதிகள்.

புரட்சி பாரதம்: 1 தொகுதி.

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் (TMMK): 1 தொகுதி.

அதிமுக களமிறங்கும் 169 தொகுதிகள் குறித்த விவரம் பின்வருமாறு:- 

1.கும்மிடிப்பூண்டி 2.பொன்னேரி 3.திருத்தணி 4.திருவள்ளூர் 5.மதுரவாயல் 6.மாதவரம் 7.திருவொற்றியூர் 8.ஆர்.கே.நகர் 9.பெரம்பூர் 10.கொளத்தூர் 11.வில்லிவாக்கம் 12.திரு.வி.க. நகர் 13.எழும்பூர் 14.ராயபுரம் 15.துறைமுகம் 16.திருவல்லிக்கேணி 17.ஆயிரம்விளக்கு 18.அண்ணாநகர் 19.விருகம்பாக்கம் 20.தியாகராயநகர் 21.வேளச்சேரி 22.சோழிங்கநல்லூர் 23.ஆலந்தூர் 24.ஸ்ரீபெரும்புதூர் 25.காஞ்சீபுரம் 26.தாம்பரம் 27.செங்கல்பட்டு 28.செய்யூர் 29.மதுராந்தகம் 30.அரக்கோணம் 31.ஆற்காடு 32.காட்பாடி 33.வேலூர் 34.அணைக்கட்டு 35.குடியாத்தம் 36.வாணியம்பாடி 37.ஆம்பூர் 38.ஜோலார்பேட்டை 39.ஊத்தங்கரை 40.பர்கூர் 41.கிருஷ்ணகிரி 42.வேப்பனஹள்ளி 43.ஓசூர் 44.பாலக்கோடு 45.பாப்பிரெட்டிப்பட்டி 46.அரூர் 47.செங்கம் 48.கீழ்பெண்ணாத்தூர் 49.கலசப்பாக்கம் 50.ஆரணி 51.செய்யாறு 52.வந்தவாசி 53.மயிலம் 54.திண்டிவனம் 55.வானூர் 56.விழுப்புரம் 57.திருக்கோவிலூர் 58.உளுந்தூர்பேட்டை 59.சங்கராபுரம் 60.கள்ளக்குறிச்சி 61.கெங்கவல்லி 62.ஆத்தூர் 63.ஏற்காடு 64.ஓமலூர் 65.மேட்டூர் 66.எடப்பாடி 67.சங்ககிரி 68.சேலம் தெற்கு 69.வீரபாண்டி 70.சேந்தமங்கலம் 71.நாமக்கல் 72.பரமத்தி வேலூர் 73.திருச்செங்கோடு 74.குமாரபாளையம் 75.ஈரோடு கிழக்கு 76.பெருந்துறை 77.பவானி 78.அந்தியூர் 79.கோபிச்செட்டிப்பாளையம் 80.பவானிசாகர் 81.கூடலூர் 82.குன்னூர் 83.தாராபுரம் 84.காங்கேயம் 85.திருப்பூர் வடக்கு 86.பல்லடம் 87.உடுமலைப்பேட்டை 88.மேட்டுப்பாளையம் 89.சூலூர் 90.கவுண்டம்பாளையம் 91.தொண்டாமுத்தூர் 92.கோவை தெற்கு 93.சிங்காநல்லூர் 94.கிணத்துக்கடவு 95.பொள்ளாச்சி 96.வால்பாறை 97.பழநி 98.ஆத்தூர் 99.நிலக்கோட்டை 100.நத்தம் 101.திண்டுக்கல் 102.வேடசந்தூர் 103.அரவக்குறிச்சி 104.கரூர்105.கிருஷ்ணராயபுரம் 106.குளித்தலை 107.மணப்பாறை 108.ஸ்ரீரங்கம் 109.திருச்சி கிழக்கு 110.திருவெறும்பூர் 111.லால்குடி 112.மண்ணச்சநல்லூர் 113.முசிறி 114.துறையூர் 115.அரியலூர் 116.திட்டக்குடி 117.நெய்வேலி 118.பண்ருட்டி 119.கடலூர் 120.குறிஞ்சிப்பாடி 121.புவனகிரி 122.சிதம்பரம் 123.சீர்காழி 124.பூம்புகார் 125.நாகப்பட்டினம் 126.வேதாரண்யம் 127.திருத்துறைப்பூண்டி 128.நன்னிலம் 129.திருவிடைமருதூர் 130.பாபநாசம் 131.ஒரத்தநாடு 132.பட்டுக்கோட்டை 133.பேராவூரணி 134.விராலிமலை 135.திருமயம் 136.ஆலங்குடி 137.சிவகங்கை 138.மேலூர் 139.மதுரை கிழக்கு 140.சோழவந்தான் 141.மதுரை வடக்கு 142.மதுரை மத்தி 143.மதுரை மேற்கு 144.திருப்பரங்குன்றம் 145.திருமங்கலம் 146.உசிலம்பட்டி 147.ஆண்டிப்பட்டி 148.போடிநாயக்கனூர் 149.கம்பம் 150.ஸ்ரீவில்லிபுத்தூர் 151.சிவகாசி 152.விருதுநகர் 153.அருப்புக்கோட்டை 154.திருச்சுழி 155.பரமக்குடி 156.திருவாடானை 157.முதுகுளத்தூர் 158.விளாத்திகுளம் 159.தூத்துக்குடி 160.ஸ்ரீவைகுண்டம் 161.கோவில்பட்டி 162.சங்கரன்கோவில் 163.கடையநல்லூர் 164.தென்காசி 165.ஆலங்குளம் 166.திருநெல்வேலி 167.அம்பாசமுத்திரம் 168.பாளையங்கோட்டை 169.கன்னியாகுமரி

வேட்பாளர் பட்டியல் வெளியீடு: தொகுதிப் பங்கீடு அறிவிக்கப்பட்ட கையோடு, அதிமுக தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை (23 பேர்) வெளியிட்டுள்ளது. இதில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்தத் தொகுதியான எடப்பாடியில் மீண்டும் போட்டியிடுகிறார். மேலும், முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார் (ராயபுரம்), எஸ்.பி.வேலுமணி (தொண்டாமுத்தூர்), பி.தங்கமணி (குமாரபாளையம்) ஆகியோருக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய வாக்குறுதிகள் (தேர்தல் அறிக்கை): கூட்டணி ஒப்பந்தத்துடன் தனது தேர்தல் அறிக்கையையும் இபிஎஸ் வெளியிட்டுள்ளார். அதில்:

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ₹2,000 நிதியுதவி.

குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம்.

அனைத்து குடும்பங்களுக்கும் ஒருமுறை உதவித்தொகையாக ₹10,000.

ஆண்களுக்கும் பேருந்துகளில் இலவசப் பயணம் போன்ற கவர்ச்சிகரமான திட்டங்கள் இடம் பெற்றுள்ளன.