அரசியல்

கேரளாவில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்: நாளை ராகுல்காந்தி தீவிர பிரசாரம்!

top-news

திருவனந்தபுரம்: கேரளாவில் மொத்தம் உள்ள 140 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. வேட்புமனு தாக்கல் முடிந்துள்ள நிலையில், தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ளதால் அம்மாநிலத்தில் அரசியல் களம் பெரும் பரபரப்பை எட்டியுள்ளது.

அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, காங்கிரஸ் பேரியக்கத்தின் முக்கியத் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல்காந்தி நாளை (புதன்கிழமை) கேரளாவுக்கு வருகை தருகிறார்.

கோழிக்கோடு பகுதியில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களில் பங்கேற்று அவர் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். ராகுல்காந்தியின் வருகையை முன்னிட்டு அந்தப் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முக்கியத் தலைவர்களின் வருகையால் கேரள தேர்தல் களம் தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.