அரசியல்

தமிழக தேர்தல் 2026: 462 பக்கங்கள் கொண்ட பிரம்மாண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் சீமான்!

top-news

2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் 462 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். "மக்களின் நலனுக்காகவே அரசு இயங்க வேண்டும்" என்ற கொள்கையின் அடிப்படையில் இந்த அறிக்கை அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 
இந்த தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ:

5 தலைநகரங்கள் திட்டம்

நிர்வாக வசதிக்காகவும், மாநிலத்தின் பரவலான வளர்ச்சிக்காகவும் தமிழகத்திற்கு ஐந்து தலைநகரங்கள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது: 

திருச்சி: முதன்மை நிர்வாகத் தலைநகரம் (தலைமைச் செயலகம் மற்றும் அமைச்சகங்கள் இங்கு செயல்படும்).
சென்னை: தொழில்நுட்பத் தலைநகரம் (IT, நிதி மற்றும் கடல்சார் வணிக மையம்).
கோவை: தொழில் மற்றும் வணிகத் தலைநகரம் (உற்பத்தித் துறை மற்றும் MSME மேம்பாடு).

மதுரை: மொழி, கலை மற்றும் பண்பாட்டுத் தலைநகரம் (தமிழ் வளர்ச்சி மற்றும் சுற்றுலா மையம்).

கன்னியாகுமரி: தமிழர் மெய்யியல் தலைநகரம் (சுற்றுச்சூழல் மற்றும் கடல்சார் மேலாண்மை மையம்). 

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

மாணவர்களின் கல்வி கடன் முற்றிலும் ரத்து செய்யப்படும்.

அனைவருக்கும் அரசு வேலை உறுதி செய்யப்படும்.

ஆங்கில மருத்துவம் (MBBS) தமிழ் வழியில் கற்பிக்கப்படும். 

சமூக நலன் மற்றும் பிற அறிவிப்புகள்

பெண்களுக்குத் தனித்தொகுதி: சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் பெண்களுக்கு எனத் தனித்தொகுதிகள் ஒதுக்கப் போராடப்படும்.

விவசாயிகள் ஓய்வூதியம்: 60 வயதிற்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.

மதுவிலக்கு: ஓராண்டிற்குள் படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும்.

இலவச குடிநீர்: குடிநீர் விற்பனை தடை செய்யப்பட்டு, அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் இலவசமாக வழங்கப்படும்.

தமிழ்த்தாய் வாழ்த்து: பாரதிதாசனின் "வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே..." என்ற பாடலே அதிகாரப்பூர்வ தமிழ்த்தாய் வாழ்த்தாக மாற்றப்படும்.