அரசியல்

தமிழகத் தேர்தல் 2026: வேட்பாளர்களின் உணவு மற்றும் வாகனச் செலவுப் பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

top-news

தமிழகம் உட்பட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதிகளைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. ஒவ்வொரு தேர்தலிலும் வேட்பாளர்கள் செய்யும் செலவுகளைக் கண்காணிக்கத் தேர்தல் ஆணையம் உச்சவரம்பை நிர்ணயிக்கும். அந்த வகையில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக வேட்பாளர்கள் பயன்படுத்தும் உணவு மற்றும் வாகனங்களுக்கான உத்தேச விலைப் பட்டியலைத் தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது. 

வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் பயன்படுத்தும் உணவுகளுக்கான விலை விவரம் பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது:

டீ: ரூ. 12
காபி: ரூ. 18
வடை: ரூ. 15
இட்லி (2): ரூ. 40
பொங்கல்: ரூ. 50
சப்பாத்தி அல்லது பூரி (2): ரூ. 60
கலவை சாதம்: ரூ. 45
வெஜ் பிரியாணி: ரூ. 50
சைவ சாப்பாடு: ரூ. 110
சிக்கன் பிரியாணி: ரூ. 110
மட்டன் பிரியாணி: ரூ. 180
அசைவ சாப்பாடு: ரூ. 350
குடிநீர் பாட்டில்: ரூ. 15 

வாகன வாடகை விவரம்: தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு (150 கி.மீ அல்லது 15 மணி நேரத்திற்கு) பின்வரும் வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது:

சாதாரண டூரிஸ்ட் கார்கள்: ரூ. 3,300
குளிர்சாதன வசதி கொண்ட கார்கள்: ரூ. 3,400
இன்னோவா போன்ற பெரிய ரக வாகனங்கள்: ரூ. 5,250 

இந்த விலைப் பட்டியலின் அடிப்படையிலேயே வேட்பாளர்களின் தேர்தல் செலவுக் கணக்குகள் அதிகாரிகளால் கணக்கிடப்படும்.