அரசியல்

தமிழக சட்டசபை தேர்தல் 2026: தேமுதிக - திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை விரைவில் தொடக்கம்

top-news

சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 

கூட்டணி நிலவரம்: வரவிருக்கும் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே தேமுதிகவுக்கு ஒரு எம்.பி. சீட் திமுக வழங்கிய நிலையில், அதில் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, சட்டசபை தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை திமுக மற்றும் தேமுதிக தரப்பு விரைவில் தொடங்க உள்ளது. 

தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்க, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் வருகிற மார்ச் 23-ம் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் (கேப்டன் ஆலயம்) நடைபெறும் இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.