அரசியல்

அதிமுக ஆட்சிமன்றக் குழு அதிரடி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதிய உறுப்பினர்கள் நியமனம்.

top-news

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கொண்ட "ஆட்சிமன்றக் குழுவை" அதிரடியாகத் திருத்தியமைத்து இன்று அதிகாரப்பூர்வ உத்தரவை வெளியிட்டுள்ளார். 

இந்தக் குழுவின் தலைவராக எடப்பாடி பழனிசாமி அவரே செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குழுவில் கட்சியின் மூத்த நிர்வாகிகளான அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோருக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் முன்னாள் அமைச்சர் வளர்மதி, வேணுகோபால், ஜஸ்டின் செல்வராஜ் மற்றும் வழக்கறிஞர் இன்பதுரை ஆகியோரும் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் வேட்பாளர் தேர்வு மற்றும் முக்கிய அரசியல் வியூகங்களை வகுப்பதில் இக்குழுவின் பங்களிப்பு மிக முக்கியமானதாகக் கருதப்படுவதால், இந்த மறுசீரமைப்பு அக்கட்சியினர் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.