அரசியல்

முதலமைச்சர் தலைமையில் நாளை காலநிலை மாற்றக் குழு கூட்டம்!

top-news

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், காலநிலை மாற்றத்திற்கான நிர்வாகக் குழுவின் (Tamil Nadu Governing Council on Climate Change) மூன்றாவது கூட்டம் நாளை (டிசம்பர் 17, 2025) சென்னையில் நடைபெற உள்ளது.


இந்தக் கூட்டத்தில் மாநிலத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமைத் திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான எதிர்கால உத்திகள் குறித்து முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.