அரசியல்

"விஜய்யை பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்தது குறித்து எனக்குத் தெரியாது" - செல்வப்பெருந்தகை விளக்கம்

top-news

சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று (டிச. 6) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகிகளை, காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.


அதற்குப் பதிலளித்த செல்வப்பெருந்தகை, பின்வருமாறு விளக்கமளித்தார்:

"பிரவீன் சக்கரவர்த்தி, நடிகர் விஜய்யைச் சந்தித்தது குறித்து எனக்குத் தெரியாது."

"விஜய்யைச் சந்திக்க பிரவீன் சக்கரவர்த்திக்கு நாங்கள் (காங்கிரஸ் தலைமை) அனுமதி வழங்கவில்லை."

"நாங்கள், தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் பேச ஐவர் குழு அமைத்திருக்கிறோம். அவர்கள் திமுகவோடு பேச்சுவார்த்தை நடத்துவது மட்டுமே எங்களுக்குத் தெரியும்."

"இந்தியா கூட்டணி வலிமையானது. இந்தக் கூட்டணியை உடைக்கவோ, சிதைக்கவோ யாராலும் முடியாது."

காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர், கட்சித் தலைமைக்குத் தெரியாமல் விஜய்யைச் சந்தித்தது குறித்து காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.