சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் பழங்குடியினத் தலைவர் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்திற்குப் பயணம் மேற்கொண்டார். அங்கு பாரம்பரிய நடனங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடி தேவ் மோக்ரா ஆலயத்தில் வழிபாடு மேற்கொண்ட பிறகு, பிர்சா முண்டாவின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். விழா மேடையில் நடைபெற்ற பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளை அவர் கண்டு ரசித்தார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பிர்சா முண்டா மற்றும் பழங்குடியின மக்களின் உன்னத பங்களிப்பை எடுத்துரைத்தார். மேலும், பழங்குடியின மாவட்டங்களை இணைக்கும் 250 புதிய பேருந்து சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


