இந்தியா

முப்படைகளுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு மிகவும் சிறப்பாக உள்ளது... பிரதமர் மோடி!

top-news

உலகின் சிறந்த பாதுகாப்புமிக்க நாடாக இந்தியாவை மாற்றுவதே மத்திய அரசின் குறிக்கோள் என்று பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

  கோவாவில் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க் கப்பலில் கடற்படை வீரர்களுடன் தீபாவளி பண்டிகை கொண்டாடிய பிரதமர், வீரர்களிடையே உரையாற்றிய போது ஐஎன்எஸ் விக்ராந்த் வெறும் போர்க்கப்பல் மட்டுமல்ல - 21ம் நூற்றாண்டின் இந்தியர்களின் கடின உழைப்பு, திறமை, தாக்கம் மற்றும் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்று என்று குறிப்பிட்டார். முப்படைகளுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு மிகவும் சிறப்பாக உள்ளதாக பாராட்டிய பிரதமர், சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானை சரணடைய இந்த ஒருங்கிணைப்பால் சாத்தியமானது என்று தெரிவித்தார். உலகின் சிறந்த பாதுகாப்பு ஏற்றுமதி நாடுளில் ஒன்றாக இந்தியாவை மாற்றுவதே மத்திய அரசின் குறிக்கோள் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
 
  நமது பாதுகாப்பு படைகளின் வீரம் மற்றும் உறுதிப்பாட்டிற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறிய பிரதமர்  நாடு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது என்றார். நாங்கள் மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தை ஒழித்து வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். கடந்த 2014-ம் ஆண்டு நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றதிலிருந்து பிரதமர் மோடி ராணுவத்தினருடன் தீபாவளி கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.