இந்திய பொருட்களை வாங்குமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
தீபாவளி பண்டிகை, நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டதையொட்டி, பிரதமர் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் தளத்தில், சுதேசி பொருட்களுக்கு முன்னுரிமை கொடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
140 கோடி இந்தியர்களின் கடின உழைப்பு, படைப்பாற்றல் மற்றும் புதுமைகளை கொண்டாடும் வகையில், இந்திய பொருட்களை இந்த பண்டிகை காலங்களில் வாங்கி கொண்டாடுமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பண்டிகைக் காலத்தில் தாங்கள் வாங்கிய பொருட்களை சுதேசி என பெருமையுடன் சொல்ல வேண்டும் என்றும் மக்கள் வாங்கியதை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
இவ்வாறு சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டால் இதன் மூலம் து மற்றவர்களும் இதைச் செய்ய ஊக்குவிக்கும் என்று பிரதமர் கூறியுள்ளார். MyGovIndia-வின் பதிவிற்கு பதிலளித்த பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.


