இந்தியா

பீகார் சட்டமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிப்பு.. 2 கட்டங்களாக வாக்குப் பதிவு!

top-news

புதுடெல்லி: பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நவம்பர் மாதம் நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


தேர்தல் அட்டவணை விவரம்:

முதல் கட்ட வாக்குப் பதிவு: நவம்பர் 6-ஆம் தேதி

இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு: நவம்பர் 11-ஆம் தேதி

இந்த இரண்டு கட்டத் தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் அனைத்தும் நவம்பர் 14-ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

பீகார் அரசியல் களத்தில் இந்தத் தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.