இந்தியா

விமானங்களில் 60% இருக்கைகளுக்கு சீட் தேர்வு கட்டணம் வசூலிக்கத் தடை: மத்திய அரசு அதிரடி உத்தரவு

top-news

சென்னை: விமானப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் புதிய அதிரடி உத்தரவு ஒன்றை இன்று பிறப்பித்துள்ளது.

கட்டணமில்லா இருக்கைகள்: இனி விமானங்களில் உள்ள மொத்த இருக்கைகளில் 60 சதவீத இருக்கைகளைத் தேர்வு செய்ய கூடுதல் கட்டணம் (Seat Selection Fee) வசூலிக்கக் கூடாது என்று டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது. குடும்பத்தினருக்கு முன்னுரிமை: ஒரே முன்பதிவு எண்ணில் (PNR) டிக்கெட் பதிவு செய்யும் பயணிகளுக்கு, அடுத்தடுத்த இருக்கைகளையே (Adjacent Seats) ஒதுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மொழியில் தகவல்: விமானப் பயணம் தொடர்பான அனைத்து முக்கிய விவரங்களையும் பயணிகளுக்கு அவர்களின் தாய்மொழியிலேயே வழங்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

தற்போது ஜன்னலோர இருக்கைகள் (Window Seats) மற்றும் முன்வரிசை இருக்கைகளைத் தேர்வு செய்ய விமான நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலித்து வருகின்றன. இது பயணிகளுக்கு கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தி வந்தது. இந்தப் புகார்களைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களின் நலனுக்காக இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. 

மேலும், விளையாட்டு உபகரணங்கள், இசைக்கருவிகள் மற்றும் செல்லப் பிராணிகளை விமானத்தில் கொண்டு செல்வது தொடர்பான விதிகளை விமான நிறுவனங்கள் தெளிவாகப் பயணிகளுக்கு விளக்க வேண்டும் என்றும் இந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.