இந்தியா

"குடியரசுத் தலைவர் பதவி அரசியலுக்கு அப்பாற்பட்டது" - மேற்கு வங்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

top-news

கொல்கத்தா: குடியரசுத் தலைவர் பதவி என்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு உன்னதமானப் பதவி என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்திற்கு வருகை தந்துள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இன்று (மார்ச் 7) பழங்குடியின மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். இந்த நிகழ்வின் முக்கியத்துவம் குறித்துப் பேசிய பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் பதவியின் கண்ணியத்தையும் அதன் நடுநிலைத் தன்மையையும் சுட்டிக்காட்டினார்.

இடம் மாற்றம்: முன்னதாக, இந்த நிகழ்ச்சியானது மேற்கு வங்கத்தின் பிதாநகர் பகுதியில் நடைபெறுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், சில தவிர்க்க முடியாத காரணங்களால் கடைசி நேரத்தில் நிகழ்ச்சி நடைபெறும் இடம் மாற்றப்பட்டது. அதன்படி, பாக்தோக்ரா விமான நிலையம் அருகேயுள்ள கோஷாய்பூர் பகுதியில் இந்தச் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.