இந்தியா

மாயமான ரஷ்ய விமானத்தின் பாகங்கள் மீட்பு: 50 பேரின் கதி என்ன ?

top-news

**மாஸ்கோ:**
ரஷ்யாவின் கிழக்கு அமூர் பகுதியில் காணாமல் போன பயணிகள் விமானத்தின் எரியும் உடற்பாகம் மீட்பு ஹெலிகாப்டரால் கண்டுபிடிக்கப்பட்டதாக அந்நாட்டின் அவசரகால கால்நிலை முகமை தெரிவித்துள்ளது. சம்பவத்தில் விமானத்தில் பயணித்த 50 பேரும் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

ரஷ்ய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “விமானம் ரேடார் கட்டுப்பாட்டில் இருந்து திடீரென விலகியது. பின்னர் விமானத்தின் எரிந்து கருகிய பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டன,” எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த விமானம், ரஷ்யா–சீன எல்லையில் உள்ள பிளாகோவெஷ்சென்ஸ்க் நகரத்திலிருந்து டின்டா நகரத்திற்குச் சென்றுள்ளது. விமானத்தில் 43 பயணிகள், 6 விமான பணியாளர்கள் மற்றும் 5 குழந்தைகள் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

**விபத்து உறுதி:**
அமூர் பிராந்திய ஆளுநர் வாசிலி ஓர்லோவ், இந்த விமான விபத்தை உறுதிப்படுத்தியுள்ளார். "விமானம் டின்டா விமான நிலையத்தை அணுகும் தருணத்தில், அது ரேடாரில் இருந்து மாயமானது. உடனே மீட்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன," என்று அவர் தெரிவித்தார்.

இந்த பயணிகள் விமானம் சைபீரியாவைச் சேர்ந்த **அங்காரா** நிறுவனத்தால் இயக்கப்பட்டதாகவும், தொழில்நுட்ப கோளாறு அல்லது வானிலை காரணமாகவா இந்த விபத்து ஏற்பட்டது என்பதற்கான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்காக இயக்கப்பட்ட இந்த விமான விபத்து, ரஷ்யாவின் பாதுகாப்பு மீதான கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.