சென்னை: 📰 இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ் தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான செயல்முறை அக்டோபர் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனத் தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. நடப்பு 2025-26 கல்வியாண்டில் 81 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்துள்ளனர்.
சேர்க்கை குறித்த முக்கிய அப்டேட்:தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2025-26 கல்வியாண்டில், தமிழ்நாடு முழுவதும் 7,717 தனியார் பள்ளிகள் RTE ஒதுக்கீட்டின் கீழ் பதிவு செய்துள்ளன. மொத்தமாக LKG-க்கு 81,927 மாணவர்களும், முதல் வகுப்புக்கு 89 மாணவர்களும் விண்ணப்பித்துள்ளனர்.
சேர்க்கை நடைமுறை:RTE சட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் சேர்க்கை அக்டோபர் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் நடைபெறும்.இந்தச் செயல்முறை முடிந்ததும், தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்துக் குழந்தைகளும் RTE ஒதுக்கீட்டின் கீழ் பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள்.RTE ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களிடமிருந்து பள்ளிகள் கல்விக் கட்டணம் எதுவும் பெறக் கூடாது என்றும், வெளிப்படையான முறையில் மாணவர் சேர்க்கையை நடத்த தமிழக அரசு உறுதிபூண்டுள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
யாருக்கெல்லாம் முன்னுரிமை?: தனியார் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்புகளில் (எல்.கே.ஜி./முதல் வகுப்பு) 25% இடங்கள் ஏழை மற்றும் நலிந்த பிரிவினருக்காக ஒதுக்கப்படுகின்றன. இந்த ஒதுக்கீட்டில், பின்வரும் பிரிவினருக்குச் சிறப்பு முன்னுரிமை வழங்கப்படுகிறது:ஆதரவற்றோர்எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட அல்லது பாதிக்கப்பட்டோரின் குழந்தைகள்மாற்றுப் பாலினத்தவர் (திருநங்கைகள்)தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகள்மாற்றுத் திறனாளிகள்விண்ணப்பங்களின் எண்ணிக்கை ஒதுக்கீட்டை விட அதிகமாக இருக்கும்பட்சத்தில், குலுக்கல் (Random Selection) முறையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்குக் குறைவாக இருக்க வேண்டும் என்பது அடிப்படைத் தகுதியாகும். இந்தச் சேர்க்கை மூலம், தகுதியுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை உறுதி செய்யப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.


