கல்வி 

காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியார் பள்ளிகள் இயக்குநரகம் கண்டிப்பு!

top-news

காலாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் (Special Classes) நடத்தக் கூடாது என தனியார் பள்ளிகள் இயக்குநரகம் கடுமையான சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.

மாநிலம் முழுவதும் தற்போது காலாண்டுத் தேர்வுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக் காலத்தில், பன்னிரண்டாம் வகுப்பு உள்ளிட்ட பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்குக்கூட எந்தவிதமான சிறப்பு வகுப்புகளையும் கட்டாயமாக நடத்தக் கூடாது என்று தனியார் பள்ளிகள் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

மீறினால் நடவடிக்கை:

இந்த உத்தரவை மீறி, விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாவட்ட கல்வி அலுவலர்கள் இது குறித்து தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மாணவர்கள் தேர்வுகளுக்குப் பிறகு மனதளவில் புத்துணர்ச்சி பெற இந்த விடுமுறை அவசியம் என்பதை வலியுறுத்தி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.