கல்வி 

அரசு கல்லூரிகளில் 881 விரிவுரையாளார்கள் காலியிடங்கள்.. விண்ணப்பிக்க தகுதி என்ன?

top-news

தமிழக அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 881 கவுரவ விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் வெளியிட்டுள்ளார்.

இப்பணியிடங்களுக்குத் தகுதியான நபர்கள் www.tngasa.org என்ற இணையதளம் வாயிலாக இன்று முதல் அக்டோபர் 8-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முக்கியத் தகவல்கள்:

பணியிடங்கள்: 881 கவுரவ விரிவுரையாளர்கள் (தற்காலிகப் பணி).

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வாயிலாக www.tngasa.org என்ற இணையதளம்.

கடைசித் தேதி: அக்டோபர் 8, 2025.

சம்பளம்: தற்காலிகப் பணியமர்த்தலின்போது மாதந்தோறும் ரூ. 25,000 தொகுப்பூதியம் வழங்கப்படும்.

வயது வரம்பு: 01.07.2025 அன்று 57 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்தப் பணியிடங்களுக்கு இளங்கலை, முதுகலை, ஆய்வியல் அறிஞர், தேசிய தகுதித் தேர்வு (நெட்), ஜே.ஆர்.எஃப். தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.