கல்வி 

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?

top-news

சென்னை: வங்கக்கடலில் நிலவிய 'டிட்வா' புயல், தற்போது மேலும் வலுவிழுந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலைக்கு வந்தது. இது, தற்போது சென்னைக்கு அருகில் வந்து, அங்கிருந்து மேலும் வலுவிழந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மையம்: வலுவிழந்த 'டிட்வா' புயல் தற்போது சென்னைக்குக் சுமார் 40 கி.மீ தொலைவிலும், தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரைகளில் இருந்து 25 கி.மீ தூரத்திலும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகக் கடலில் மையம் கொண்டுள்ளது.

மழை நீடிப்பு: இதன் காரணமாகச் சென்னையில் இன்று காலை முதலேப் பல பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. தாழ்வானப் பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போலத் தேங்கி, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்சு அலர்ட்: புயல் வலுவிழந்தாலும், அதிக மழைப்பொழிவிற்கான வாய்ப்பு உள்ளதால், இன்று இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு மிகக் கனமழைக்கான 'ஆரஞ்சு அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாளை (டிசம்பர் 3) விடுமுறை அறிவிப்புகள்

தொடர் மழை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாளை (டிசம்பர் 3, 2025, புதன்கிழமை) பின்வரும் மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது:

சென்னை: பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை.

திருவள்ளூர்: பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை.

செங்கல்பட்டு: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.