சென்னை: திரையுலகின் 'உலக நாயகன்' என்று போற்றப்படும் நடிகரும், மாநிலங்களவை எம்.பி.யுமான கமல்ஹாசன் இன்று (நவம்பர் 7, 2025) தனது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், அவரது நெருங்கிய நண்பரும் பிரபலக் கவிஞருமான வைரமுத்து அவர்கள் நெகிழ்ச்சி பொங்க வாழ்த்துத் தெரிவித்துச் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வைரமுத்துவின் 'வைர' வரிகள்
கவிஞர் வைரமுத்து அவர்கள், கமல்ஹாசனை வாழ்த்தித் தனது அதிகாரபூர்வமான 'எக்ஸ்' (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட வரிகள் இதோ:
"இந்தியக்
கலைஅடையாளங்களுள் ஒருவர்
கலைஞானி கமல்ஹாசன்
கலையே வாழ்வாய்
வாழ்வே கலையாய்
மாறிப்போன மனிதர்
வாழ்வியல் புயல்களையும்
விமர்சனச்
சூறாவளிகளையும் தாண்டி
அவர் என்ன காரணங்களுக்காகக்
கொண்டாடப்படுகிறாரோ
அந்தக் காரணங்கள்
வாழ்வெல்லாம் நிலைத்திருக்க
வாழ்த்துகிறேன்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


