சினிமா

ஸ்ரீயை நங்கள் பார்த்துக்கொள்கிறோம்.. லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்

top-news



சென்னை: நடிகர் ஸ்ரீ குறித்து எழுந்த சமீபத்திய சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் ஸ்ரீ பதிவிட்ட வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு உள்ளிட்ட நண்பர்கள் சேர்ந்து ஸ்ரீயை மீட்டு, அவரை நலமாக்க முயற்சி செய்துள்ளனர்.

இதுகுறித்து லோகேஷ் கூறுகையில்,
“இப்போது ஸ்ரீ நன்றாக இருக்கிறார். ஒரு நாள் காலையில் வீடியோவில், புத்தகம் ஒன்றை வெளியிடப்போகிறேன் என்று சொன்னார். நானும் திட்டமிட்டுத்தான் செய்யலாமே என்றேன். ஆனா, ‘இல்லை மச்சான், உடனே பண்ணணும்’ என்றார். அதற்கு நான், ‘சரி பண்ணு’னு சொன்னேன். பின்னர் வந்த ரீல் காரணமாக நாங்களே ஸ்ரீயைப் பின்தொடரவில்லை என்று விமர்சனம் வந்தது. இதெல்லாம் தான் சமூகவலைதளங்களில் இருந்து விலக காரணம்,” என்றார்.

“தினமும் எழுந்தவுடன் விளக்கமளிக்க முடியாது. ஸ்ரீ என் நண்பன் என்பது உண்மைதான். ஆனாலும் இது அவனது வாழ்க்கை. அவனுக்கென்று ஒரு குடும்பம் இருக்கிறது. அதனால் அவனைப் பற்றிப் பேச தயங்குகிறேன். அவன் முழுமையாக குணமாகி திரும்பிய பிறகு, அவன் பற்றிய பேச்சுகளை ஒருநாள் அவனே இணையத்தில் பார்ப்பான். அதற்கான பொறுப்பு நம்மிடமில்லை,” என்றார்.

“ஸ்ரீயின் நிலையை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எதையெல்லாம் செய்து வருகிறோம் என்பதை வெளியில் சொல்ல வேண்டியதில்லை. எஸ்.ஆர். பிரபுவையும் என்னையும் திட்டினார்கள். இந்த எல்லாம் நடக்கும் நேரத்தில் நானும் படப்பிடிப்பு வேலைக்குச் செல்ல வேண்டியிருந்தது. அதனால்தான் சமூக வலைதளங்களில் இருந்து விலகினேன்,” என்று தனது மனநிலையை பகிர்ந்துள்ளார்.

**“இப்போது ஸ்ரீ நன்றாக இருக்கிறார். நாளை என்ன நடக்கும் என யாருக்கும் தெரியாது. ஆனால் நாங்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் துணையாக இருக்கிறோம்,”** என்று முடித்தார் லோகேஷ் கனகராஜ்.