தமிழ் திரையுலகில் தனது நகைச்சுவை மற்றும் இயல்பான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகர் முத்துக்காளை, மனைவியின் மறைவால் கடும் துயரத்தில் ஆழ்ந்துள்ளார்.
நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படும் அவரது மனைவி உயிரிழந்ததைத் தொடர்ந்து, முத்துக்காளை கதறி அழுத காட்சிகள் ரசிகர்களையும் திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
“என் வாழ்க்கையே வெறுமையாகிவிட்டது” என அவர் வேதனையுடன் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குடும்பத்தினருடன் பல ஆண்டுகள் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வந்த முத்துக்காளைக்கு இது மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.
இந்த செய்தி வெளியாகியதையடுத்து திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் ரசிகர்கள் ஆறுதல் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்


