சினிமா

“நான் உயிரோட இருக்கிறது கூட அவங்களுக்கு பிடிக்கலை!”

top-news

சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், ஆர்த்தி குறித்து வெளியாகியுள்ள புதிய தகவல் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. “நான் உயிரோட இருக்கிறதே சிலருக்கு பிடிக்கவில்லை” என வேதனையுடன் அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குடும்ப மற்றும் தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படும் ஆர்த்தி, தன்னைத்தானே காயப்படுத்திக்கொண்டு மிரட்டியதாகவும், அதனைத் தொடர்ந்து வீட்டினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக வெளியான தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், ரசிகர்கள் மற்றும் நெருங்கியவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். “இது கவனிக்க வேண்டிய மனநிலை பிரச்சனை” என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், இந்த விவகாரம் குறித்து ஆர்த்தி தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை. சம்பவத்தின் உண்மை நிலை குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருவதால், சமூக வலைதளங்களில் விவாதம் தீவிரமடைந்துள்ளது.