சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்து, சவரன் 91 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அக்டோபர் மாதத்தில் தங்கம் விலை அடிக்கடி உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. தீபாவளிக்கு பிறகே தங்கம் விலை குறைய தொடங்கியது.
இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்து, 91 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமிற்கு 110 ரூபாய் உயர்ந்து, 11 ஆயிரத்து 410 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்நிலையில், மீண்டும் இன்று மாலை தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்தது.
அதன்படி 22 காரட் கிராமுக்கு 70 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் தங்கம் 11,480 ரூபாய்க்கும், சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் 91,840 ரூபாய் க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை காலை கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 167 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், மாலை மீண்டும் ஒரு கிராமுக்கு 2 ரூபாய் அதிகரித்து தற்போது ஒரு கிராம் வெள்ளி 169 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுருகிறது.


