வணிகம்

நகை வாங்குவோருக்கு மீண்டும் மகிழ்ச்சி! தங்கம் விலை அதிரடிச் சரிவு; சவரனுக்கு ரூ.1,280 குறைந்தது!

top-news

சென்னை: நீண்ட நாட்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலையில் இன்று (புதன்கிழமை, அக்டோபர் 22) திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது. மாலையில் நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.160 குறைந்து விற்பனையாகிறது.

இன்று காலை ரூ.11,700-க்கு விற்பனையான ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, மாலை நிலவரப்படி கிராமுக்கு ரூ.160 அதிரடியாகக் குறைந்து, ரூ.11,540-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சவரனுக்கு ரூ.1,280 சரிவு:

கிராமுக்கு ரூ.160 குறைந்ததன் காரணமாக, ஒரு சவரன் (8 கிராம்) தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ.1,280 சரிந்து, தற்போது ரூ.92,320-க்கு விற்பனையாகிறது.

நேற்று (அக்டோபர் 21) மாலை நிலவரப்படி, ஒரு சவரன் தங்கம் ரூ.96,000-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று காலை ரூ.93,600-க்கு குறைந்தது. தற்போது மேலும் குறைந்து ரூ.92,320-க்கு விற்பனையாவது, தொடர்ச்சியான விலை உயர்வுகளால் தயங்கி நின்ற நகை பிரியர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேசச் சந்தையில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கங்களே இந்த விலை மாற்றத்திற்குக் காரணம் என்று சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.