சென்னை: தங்கத்தின் விலை இன்று (அக்டோபர் 21ஆம் தேதி) ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்து, முதலீட்டாளர்கள் மற்றும் நகை வாங்குவோரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று, 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.260 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.12,180-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று இருந்த விலையில் இருந்து சவரனுக்கு (8 கிராம்) மட்டுமே ரூ.2,080 உயர்ந்து, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.97,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற நிலைகள் மற்றும் மத்திய வங்கிகளின் தங்க முதலீட்டு ஆர்வம் போன்ற காரணங்களால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதன் எதிரொலியாக இந்தியச் சந்தையிலும் இந்த அதிரடி விலை உயர்வு காணப்படுவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். பண்டிகைக் கால விற்பனையின் மத்தியில் இந்த விலை ஏற்றம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


