வணிகம்

காலையில் அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலையில் புதிய திருப்பம்... விலை என்ன?

top-news

சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை காலை சவரனுக்கு இரண்டாயிரம் ரூபாய் குறைந்த நிலையில், மா‍லை மீண்டும் அதிகரித்துள்ளது.

   
நாளுக்கு நாள் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இருப்பினும் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 250 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் 11 ஆயிரத்து 950-க்கு விற்பனையானது. ஒரு சவரன் தங்கம் 2 ஆயிரம் ரூபாய் குறைந்து 95 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனையானது. 
 
இந்நிலையில், மாலை மீண்டும் சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து 96 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு 50 ரூபாய் அதிகரித்து 12 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.
   
வெள்ளி விலையில் எந்த மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.190க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,90,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.