சென்னை: தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று (அக்டோபர் 11) மீண்டும் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை மாற்றங்களின் எதிரொலியாக, உள்ளூர் சந்தையிலும் இன்று விலை அதிகரித்துள்ளது.
தங்கத்தின் விலை நிலவரம்:
இன்றைய நிலவரப்படி, ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கம் ரூ.85 உயர்ந்து ரூ.11,425-க்கு விற்பனையாகிறது. இதைத் தொடர்ந்து, 8 கிராம் கொண்ட ஒரு சவரன் தங்கம் ஒரே நாளில் ரூ.680 அதிகரித்து, வரலாறு காணாத வகையில் ரூ.91,400 என்ற புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
வெள்ளி விலை நிலவரம்:
தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் இன்று கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.3 உயர்ந்து, இன்று ரூ.187-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.3,000 உயர்ந்து, ரூ.1,87,000 என்ற விலையில் விற்பனையாகிறது.
தொடர்ச்சியாக ஏறுமுகத்தில் இருக்கும் தங்கம் மற்றும் வெள்ளி விலை, இல்லத்தரசிகள் மற்றும் நகை வாங்குவோரிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.


