புதிய மாதத்தின் தொடக்க நாளான இன்று (அக்டோபர் 1, 2025) தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. நேற்றுடன் ஒப்பிடுகையில், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.30 உயர்ந்தது. இதன் காரணமாக ஒரு சவரன் தங்கம் ரூ.87,000 என்ற எல்லையைக் கடந்து விற்பனை செய்யப்படுகிறது.
அக்டோபர் மாதத்தின் தொடக்க நாளான இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,890க்கும் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.87,120க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன்மூலம் தங்கம் விலை ரூ.87,000-ஐ கடந்தது.
வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் 161 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,61,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கடந்த சில வாரங்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், இன்று கணிசமாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.87,120-க்கு விற்பனை செய்யப்படுவது நகை வாங்குவோரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த உயர்வு, முதலீட்டுத் தங்கத்தின் மீதான உலகளாவிய சந்தை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற காரணிகளைப் பொறுத்து நிர்ணயிக்கப்படுவதாகச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


