வணிகம்

புதிய உச்சத்தை அடைந்த தங்கம் விலை.. கிராம் 11 ஆயிரத்தை நெருங்கிய விலை ..!

top-news

தங்கம் விலை உயர்வு மற்றும் இறக்கம் கண்டு வருவது வாடிக்கையாக உள்ளது. அதன் தொடர்ச்சியாக, இன்று (செப்டம்பர் 29ஆம் தேதி) தங்கத்தின் விலையில் அதிரடி உயர்வு காணப்பட்டுள்ளது.



அதன்படி, இன்று 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.10,700க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், எட்டு கிராம் கொண்ட ஒரு சவரன் தங்கத்தின் விலையும் ரூ.480 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.85,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.