வணிகம்

சுந்தர் பிச்சை சொத்து மதிப்பு ரூ.8,000 கோடியை தாண்டியது

top-news



மவுண்டன் வியூ: கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு 1 பில்லியன் அமெரிக்க டாலரை (இந்திய மதிப்பில் ரூ.8,000 கோடி) கடந்துள்ளதாக ப்ளூம்பெர்க் பில்லியனேர் இன்டெக்ஸ் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த உயர்வு, கூகுளின் தாய் நிறுவனம் ஆல்பாபெட்டின் பங்குகள் சமீபத்தில் பங்குச் சந்தையில் கணிசமாக உயர்ந்ததன் விளைவாக ஏற்பட்டது. பங்கு விலை உயர்வால் ஆல்பாபெட்டின் சந்தை மதிப்பும் பெரிதும் அதிகரித்துள்ளது. இதன் மூலம் முதலீட்டாளர்களும் பெரிய அளவில் லாபம் கண்டுள்ளனர்.

சுந்தர் பிச்சை தற்போது நிறுவனர் அல்லாத தலைமை செயல் அதிகாரி வகுப்பில் 1 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை கொண்டவர்களின் பட்டியலில் இணைந்துள்ளார். இது மிகவும் அபூர்வமான நிலையாகும்.

தமிழகத்தைச் சேர்ந்த 53 வயதான சுந்தர் பிச்சை, தனது பள்ளிப் படிப்பை மாநிலத்திலேயே முடித்தவர். பின்னர் ஐஐடி கரக்பூரில் பொறியியல் பட்டம் பெற்றார். மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்ற அவர், 2004-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் பணியமர்ந்து, 2015-ம் ஆண்டு முதல் அதன் சிஇஓ ஆகப் பதவியேற்றார்.

தொழில்நுட்ப உலகில் கோலோச்சும் கூகுளின் வளர்ச்சிக்கு பிச்சையின் வழிகாட்டுதல் முக்கிய பங்காற்றி வருவது குறிப்பிடத்தக்கது.