வணிகம்

சற்றே குறைந்தே தங்கம் விலை.. இல்லத்தரசிகள் நிம்மதி !

top-news

சென்னை, ஆக. 11 — தங்கம் விலை இன்று சற்று குறைந்து, நகை வாங்குபவர்களுக்கு சிறிய அளவில் நிம்மதி அளித்துள்ளன. கடந்த வாரம் சர்வதேச சந்தை நிலவரங்களால் தங்க விலை புதிய உச்சங்களை தொட்டிருந்த நிலையில், இன்று விலைகள் குறைவடைந்துள்ளன.

நகை வியாபாரிகள் தெரிவித்ததாவது:

இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.9,375-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு பவுன் (8 கிராம்) தங்கம் ரூ.560 குறைந்து ரூ.75,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.7,745-ஆகவும், பவுனுக்கு ரூ.480 குறைந்து ரூ.61,960-ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றம் ஏதும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.127-க்கும், கட்டி வெள்ளி (1 கிலோ) ரூ.1,27,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நிதி வட்டாரங்களின் கூற்றுப்படி, உலக சந்தையில் தங்க விலையில் ஏற்பட்ட குறைவு மற்றும் அமெரிக்க டாலர் மதிப்பில் ஏற்பட்ட மாற்றம் ஆகியவை இன்று உள்ளூர் சந்தை விலைகளில் பிரதிபலித்துள்ளதாக கூறப்படுகிறது.

நகை வியாபாரிகள், திருமணங்கள் மற்றும் பண்டிகை காலங்களை முன்னிட்டு, விலை குறைவால் நகை வாங்கும் ஆர்வம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கின்றனர்.